பரம்பரா அகாடமி சீனியர் சிபிஎஸ்இ செகண்டரி பள்ளி விளையாட்டு விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், வடமாம்பாக்கம் ஊராட்சி எல்லையில் எஸ்.கே பரம்பரா அகாடமி சீனியர் செகண்டரி (சிபிஎஸ்இ உடன் இணைந்தது) பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் .கேல் மஹோத்சவ் எனும் மாபெரும் ஆண்டுவிளையாட்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விளையாட்டு விழாவிற்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர். பார்த்தசாரதி வெங்கடராமன் நல்லாசியுடன் அறங்காவலர். கமல் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசிய போது இப்பள்ளி விளையாட்டு மற்றும் கல்வியில் அதிக பணம் செலுத்தி வருகிறது. இப்பள்ளியில் பயின்ற மாணவர் இருவர் டாக்டர் படிப்பு படிக்கவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் ஆகவே இனி வரும் காலங்களில் ஐஐடி டாக்டர் மற்றும் விளையாட்டுகளுக்கு அதிக கவனம் செலுத்தும் என கூறினார். வருடாந்திர விளையாட்டு தினம்-2025 விழா கொண்டாடத்திற்கு வந்தவர்களை பள்ளி முதல்வர் சாமுவேல் கிறிசோஸ்டம்.ஜே. வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். ஒய்.ஜாஃபர் சித்திக் மற்றும் அரக்கோணம் ஒன்றியம், வடமாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர், டி. பாக்கியராஜ் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடி / தேசிய மற்றும் பள்ளி கொடிகளை ஏற்றினர் பின்னர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றுகளை வழங்கினர். விழாவில் திரளாக பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் துணை முதல்வர் அகஸ்டின் செல்ல பாபு நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக