பள்ளூர் காலனிக்கு தனி நியாய விலை கடை மாவட்ட ஆட்சியருக்கு சு.ரவி எம்.எல்.ஏ கடிதம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி பள்ளூர் கிராமத்தை ஆய்வு செய்தார் அப்போது நியாயவிலை கடைக்கு சென்ற போது தங்களுக்கு தனி நியாய விலை கடை வேண்டும் காலணி மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினார் அதில் அவர் கூறியருப்பதாவது.


அரக்கோணம் தொகுதியில் பள்ளூர் ஊராட்சி உள்ளது. இந்த பள்ளூர் நியாய விலை கடையில் சுமார் 1100 குடும்ப  அட்டைகள் உள்ளது இதில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளூர் ஆதிதிராவிட மக்களின் இரு காலணிகள் உள்ளது.  சுமார் 600 குடும்ப அட்டைகள் கொண்டவர்களும் இங்கு பொருட்கள் வாங்கும் அவலநிலை இருந்து வருகிறது. இதனால்  அரசு வழங்கும் நுகர் பொருள் வாங்க ஒரு குடும்ப அட்டைக்கு 10 நிமிடம் என்றால் பல மணி நேரமாகிறது  இதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது ஆகவே, ஆதிராவிட இரு காலனி மக்களுக்கு தனி நியாய விலை கடை அமைத்துதா  வேண்டுகிறேன் மேலும், பள்ளூர் காலனியில் நியாய விலை கடை துவங்குவதற்கு பழைய  அங்கன்வாடி கட்டிடமும் தயாராக உள்ளது என கடிதத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார் ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் .ஏ.ஜி. விஜயன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ககை சபை, கீதாப்பிரிய ராஜா உட்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தால் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!