குறிஞ்சிப்பாடி அருகே ஆலப்பாக்கம் ஊராட்சியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!


கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி,குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் CFSIDS திட்டம் 2024 - 2025 ன் கீழ் ரூ. 34.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாந்தோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ர.அ.பிரியங்கா இ.ஆ.ப, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்