வேலூரில் நடைபெற்ற 79 வது சுதந்திரதின விழா!!

செய்தித்துறை பிஆர்ஓ அலுவலக உதவியாளர் தரணிக்கு, ஆட்சியர் சிறந்த பணியாளருக்கான சான்று வழங்கி பாராட்டு!வேலூர் மாவட்டம், வேலூர் நேதாஜி மைதானத்தில் (15.08.2025) நடைபெற்ற 79ம் சுதந்திரதின விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர், செய்தித்துறையில் பி.ஆர்.ஓ. அலுவலக உதவியாளர் தரணிக்கு, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட அளவிலான அனைத்து துறைகள் சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தேசபக்தி மிகு. முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் கருத்து நாளிதழ் சார்பாகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாகவும், மாவட்ட அளவிலான அனைத்து செய்தியாளர்கள் சார்பாகவும் பி ஆர் ஓ அலுவலக உதவியாளர் தரணியின் பணி சிறக்க, பதவி உயர்வு பெற்றிட, மென்மேலும் புகழ் வளர்ந்திட வாழ்த்துகள் என வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்