ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்நாடு வெளிநாடுகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ஐசக் கல்லூரியில்! பொதுமக்களுக்கு அழைப்பு! டாக்டர். ஐசக்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,உள்நாட்டு வெளிநாட்டுவேலை வாய்ப்பிற்கான பயிற்சி முகாம் அலுவலகம் திறப்பு விழா அரக்கோணம் அடுத்த மஞ்சம்பாடி கிராமத்தில் ஐசக்கலை கல்லூரியில் உள்நாட்டு வெளிநாடுவேலை வாய்ப்பிற்கான பயிற்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா கல்லூரி நிறுவனத் தலைவர். டாக்டர். வி .எஸ் .ஐசக் அய்யா தலைமையில் நடந்தது. கல்லூரி மேலாளர் ஜெய்சன் வரவேற்று பேசினார் கல்லூரி துணை தலைவர். பிரேமா ஜசக் அம்மா குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது இயக்குனர்கள் ஜாஸ் மின் கிளின்டன் ஆகியோரும் டேவிட்டும் குத்து விளக்கேற்றினர். விழாவில் கல்லூரி முதல்வர். பேராசிரியர்கள் பலரும் அகில இந்திய ஜனநாயக மக்கள் நிர்வாகிகள் சத்தியா தேவசித்தம் ஶ்ரீதர் சசிகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர் விழாவில் டாக்டர். ஜசக் கூறியதாவது
உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் தமிழக அரசு தொழில் நிறுவனம் டாம்சம்மும் இணைந்து வேலையில்லாத வர்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் ஒப்பந்தம் செய்ய்பட்டு 3ஆம்தேதி அதற்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தேர்வு முகாம் இங்கு நடைபெற இருக்கிறது. ஆகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று கொள்ள வாருங்கள் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து இவ்வாறு அவர் பேசினார்.
அரக்கோணம் செய்தால் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக