அரசஉயர்நிலைப்பள்ளி வண்ணாங்குடிகாடு விருத்தாசலம் கல்விமாவட்டம்மன்றங்கள் துவக்கவிழா! 2025
கடலூர் மாவட்டம்,பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைக்கு இணங்க மன்றங்கள் துவக்க விழா நேற்று (03.07.2025) பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. அருமைச்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.விழாவின்ய துவக்கத்தில் அனைவரையும் வரவேற்று, மன்றங்களின் செயல்பாடுகள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மன்றங்களின் பொறுப்பாசிரியர்கள் விளக்க உரை ஆற்றினர்ஒவ்வொரு மன்றத்திற்கும் மாணவ தூதுவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.பள்ளி மற்றும் வகுப்பறை அளவில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளும் மகிழ்முற்ற மாணவர் குழுக்கள் வாயிலாகவே நடைபெற வேண்டும் என்று மகிழ்முற்றஆசிரியர்ஒருங்கிணைப்பாளர்எடுத்துரைத்தார்.விழாவின் இறுதியில் மன்றச் செயல்பாடுகளுக்கான மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக