அரக்கோணம் சேலம் ரயில் சேவை நிறுத்தம்!அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் கண்டனம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் தலைவர். நைனா மாசிலாமணி மற்றும் பொதுச் செயலாளர். எம் எஸ் குணசீலன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருத்தமும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அதில் தெரிவித்து இருப்பதாவது அரக்கோணம் சேலம் இடையே ரயில் சேவை மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறி உத்தரப்பிரதேச கும்பமேளாவிற்கு நிறுத்தம் செய்து அரக்கோணம் சேலம் ரயில் முழுபெட்டிகளை அனுப்பி வைத்து இங்கு செயல்பட்ட ரயில் சேவையை நிறுத்தினர். அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்த பின் ரயில்சேவை மீண்டும் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் இயக்கபட்ட சில நாட்களுக்குள்ளாக மீண்டும் ரயில் சேவை நிறுத்த போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏனெனில் வட மாநில பண்டிகை முன்னிட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது இது பயணிகளிடையே மிகுந்த அசௌகரித்தை தந்துள்ளது எனவே இத்தகவல் வருத்தம் உடையதாகவும் கடும் கண்டனத்துக்குரியதாகவும் அமைந்து இருக்கிறது எனவே ரயில் சேவைவை நிறுத்த கூடாது என வலியுத்திகிறோம். என குறிப்பிட்டுவுள்ளனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக