சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கணிப்பொறி ஆய்வகத்தில் நான் முதல்வன் இடத்தில் வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கணிப்பொறிகள் திருட்டு!!


அண்ணாமலை பல்கலைக்கழகம் கணிப்பொறி ஆய்வகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட கணிப்பொறிகள் 15 CPU 9 மானிட்டர் 4 மவுஸ், 4 கீபோர்ட்  களவு போனதாக  செல்வகுமார் கணிப்பொறி துறை பொறியியல் துறை தலைவர் என்பவர் கொடுத்த புகார் மனுவில் வழக்கு பதிவு செய்தும், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS  அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் சிதம்பரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். லாமேக் அவர்கள் அறிவுரையின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கர் உதவி ஆய்வாளர். குப்புசாமி காவலர்கள். மணிகண்டன், ராஜீவ் காந்தி, ஞானப்பிரகாசம், ரமணி, தமிழரசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தும், சிசிடிவி கேமரா ஆகியவற்றை ஆய்வு செய்ததில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஊமங்கலம் அரசகுழியைச் சேர்ந்த ஜேசுதாஸ் மகன் லிவின் அஜய் வயது 18 என்பவர் கல்லூரியில்   சுரங்க படிப்பில் டிப்ளமோ படித்து வருபவர் மேற்கண்ட குற்ற செயலில் ஈடுபட்டதும், மேற்படி திருடிய கணிப்பொறிகளை ஓஎல்எக்ஸிலும் மற்றும் நேரடியாகவும் வரவழைத்து விற்றுள்ளார். மேற்படி கணிப்பொறியில் விற்பனை செய்ததில் வாங்கியவர்கள் சந்தேகம் அடைந்து திரும்ப அவனிடமே ஒப்படைத்துள்ளனர். மேற்படி ஒப்படைக்கப்பட்ட கணிப்பொறிகளை பல்கலைக்கழக பின்புறம் உள்ள முட்புதரில் மறைத்து வைத்தது மேற்படி எதிரி கைது செய்யப்பட்டபோது அடையாளம் காண்பித்து ஆஜர் செய்தார். அவற்றை காவல்துறையினர் கைப்பற்றி மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மொத்த மதிப்பு சுமார் 5லட்சம். என தகவல் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்