கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

👉.விருத்தாச்சலத்தில் போலீஸ் வாகனம் மீது காரை மோதிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த காரில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்.

👉.அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்க கடலூர் போக்குவரத்து போலீசார் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

👉.சென்னையில் இருந்து முதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் நேற்று இரவு ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே விபத்துக்குள்ளானது. உயிர் சேதம் ஏதும் இல்லை.

👉.வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சிதம்பரம் இரயில் நிலையத்தை மனிதநேய ஜனநாயக கட்சியினர் முற்றுகை இட்டதனால் 44 பேர் கைது.

👉.கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

👉.சேத்தியாத்தோப்பு பகுதியில் வியாபாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதால் தர்பூசணி பழங்கள் வயலில் அழுகி வீணாகும் அவல நிலை. 

👉.நெய்வேலி பொதுத்துறை நிறுவன நாள் விழாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு என என்.எல்.சி தலைவர் தகவல்.

👉.அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை. 

👉. கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு. 

👉.கடலூரில் 102°  வெயில் கொளுத்தியது அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி. 

👉.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. 

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்