கடலூர் அருகே வடக்கிருப்பு குப்பைமேடு பகுதியில் விற்பனைக்காக காஞ்சாவை பிரித்து கொண்டிருந்த நபர்கள் கைது! காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை  கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர். லாமேக் அவர்கள் மேற்பார்வையில், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கர், உதவி ஆய்வாளர். பிரகாஷ், மற்றும் போலீசார்   வடக்கிருப்பு குப்பைமேடு அருகே   விற்பனைக்காக கஞ்சாவை பிரித்து கொண்டிருந்த 1. கதிரவன் வயது 21, வேளக்குடி, 2. தமிழ்செல்வன் வயது 21, வேளக்குடி, அண்ணாமலை நகர், 3. பிரபு வயது 27, பொய்யாபிள்ளைசாவடி, சிதம்பரம் தாலுக்கா, 4. அருண்குமார் வயது 22, தீர்த்தம்பாளையம், புவனகிரி, 5. பாலா வயது 25, வீரசோழன் துணிச்சிரமேடு, சிதம்பரம் தாலுக்கா, 6. கௌஷிக், சிதம்பரம் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 21 கிலோ , கஞ்சா மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் ஒரு செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்