கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .03.04.2025 (வியாழக்கிழமை)

👉.கடலூரில் 2 காவலர்களை அறிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

👉.கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நாளை நடக்கிறது.

👉.விருத்தாச்சலம் அடுத்த கட்சிராயநத்தம் கிராமத்தில் திருமணமான 10 மாதத்தில் விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

👉.கடலூர் கோட்டை அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது.

👉.விருத்தாச்சலம் நகரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் மற்றும் ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருவதால் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

👉.காட்டுமன்னார்கோவிலில் செல்போன் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

👉.புது வண்டி பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 

👉.கடலூர் மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக ஹாரன் எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்யப்பட்டது.

👉. சிதம்பரம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீட்டில் நகை பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

👉. கடலூர் உழவர் சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.2¾ கோடிக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல்.

👉. கடலூர் மாவட்டத்தின் அடுத்த மாதம் மே 15 தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியரை எச்சரிக்கை. 

👉. வேலுடையான் பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 

👉 புவனகிரி அருகே எல்லைக்குடி அரசு பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து மூன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

👉. தில்லை காமன் கோவில் மீனவர் தெருவில் வீட்டுக்குள் புகுந்து 7 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

👉. நெய்வேலி என்.எல்.சி அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய இரண்டு ரவுடிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

👉. நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற 70 வயது முதியவர் சோழன் எக்ஸ்பிரஸ் மோதி உயிரிழந்தார்.

👉. புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டை சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்