ராஜபாளையம்- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 72 நபர்கள் ரத்தம் கொடுக்கும் ரத்த தான முகாமை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் அவர்கள் தொடங்கி வைப்பு!
இராஜபாளையம் தொகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 72 நபர்கள் ரத்தம் கொடுக்கும் இரத்த தான முகாமை MLA எஸ். தங்கப்பாண்டியன், வாரியத் துணைத்தலைவர். ராசா அருண்மொழி அவர்கள் தொடங்கி வைத்து, ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் MLA அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு மகப்பேறு மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுடன் இணைந்து MLA அவர்கள் கேக் வெட்டி பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் கூறினார். இந்நிகழ்வில் தலைமை மருத்துவர். மாரியப்பன், நகர செயலாளர்கள். ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு
உறுப்பினர். கனகராஜ், சேத்தூர் சேர்மன். பாலசுப்ரமணியன் , மாவட்ட மீனவரணி அமைப்பாளர். நவமணி, மாவட்ட மருத்துவரணி. ராதா, இளைஞரணி. ஆனந்த், நகர, பேரூர் மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கிளை வார்டு கழக செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் இதில் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக